காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆதிவாசிகளாக காட்டில் குடியேறும் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஆதிவாசிகளாக காட்டில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-04-07 22:15 GMT
ராமநாதபுரம்,

உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் ராமநாதபுரம் மாவட்ட தமிழக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஆதிவாசிகளாக காட்டில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

திருப்புல்லாணி அருகே உள்ள பொக்காரனேந்தல் பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்து அருகில் உள்ள சீமைக்கருவேல காட்டுப்பகுதிக்குள் ஆதிவாசிகள் போன்று வேடமணிந்து உடலில் கரியை பூசி இலைதழைகளை கட்டிக்கொண்டு ஆதிவாசிகளை போல தமிழக மக்கள் எழுச்சி கழகத் தினர் சென்றனர். அப்போது தங்களின் தட்டுமுட்டு சாமான்கள், ஆடு, கோழி, கன்றுகுட்டி போன்றவைகளையும் அழைத்து சென்றனர்.

இந்த போராட்டத்துக்கு தமிழக மக்கள் எழுச்சி கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பசீர்அலி, மாவட்ட தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை நகர் செயலாளர் செல்வம், மாநில துணை செயலாளர் கலீமா, மாவட்ட தலைவி ஜெயலட்சுமி யசோதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் எ ன்றும், மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட் டால் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை ஒப்படைத் துவிட்டு நிரந்தரமாக வனப்பகுதிக்குள் குடியேற முடிவு செய்துள்ளதாக மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆதிவாசிகள் போன்று வேடமணிந்து போராட்டக்காரர்கள் காட்டுக்குள் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்