‘என் உயிரே போனாலும் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த விடமாட்டேன்’ - வைகோ ஆவேச பேச்சு
‘என் உயிரே போனாலும் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த விடமாட்டேன்’ என்று வைகோ ஆவேசமாக பேசினார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் போடி அருகே அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31-ந்தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். 7-வது நாளான நேற்று காலையில் அம்பரப்பர் மலை அமைந்துள்ள பொட்டிப்புரம்-புதுக்கோட்டை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
சொக்கநாதபுரம், தே.ரெங்கநாதபுரம், தேவாரம், மல்லிங்காபுரம், பண்ணைப்புரம் ஆகிய ஊர்களுக்கு வீதி, வீதியாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் நடந்து வந்தார். வழி நெடுகிலும் ஏராளமான கிராம மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். ஆங்காங்கே பொதுமக்கள் மத்தியில் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் அழுத்தத்தால் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் பிறநாடுகளின் அணு ஆயுதங்களை செயல் இழக்க செய்ய முடியும் என்று கூறுகின்றனர். இதனால் அம்பரப்பர் மலையை, முதலில் அழிக்க எதிரி நாடுகள் இங்கு தான் குண்டு வீசுவார்கள். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் அழிந்து போகும். 500 வருடங்களுக்கு இந்த பகுதியில் உயிரினங்கள் வாழ முடியாது.
அம்பரப்பர் மலையில் 11 லட்சத்து 85 ஆயிரம் டன் பாறையை உடைத்து 45 மீட்டர் ஆழத்தில் 50 ஆயிரம் காந்த கற்கள் வைக்க உள்ளனர். இந்த திட்டத்தை எதற் காக கொண்டு வந்தார்கள் என்றால், அணுக்கழிவுகளை கொட்டுவதற்கு என்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். இதனை எதிர்த்து, நான் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றேன்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நீங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதி அளித்து விடாதீர்கள். அனுமதி அளித்து அந்த பாவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இதற்கு மன்னிப்பே கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது.
மேலாண்மை வாரியம் அமைக்காமல் மீத்தேன், ஹைட்ரோகார்பன், எண்ணெய் எரிவாயு திட்டம் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளனர். பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் தொடர் போராட்டம் நடத்தி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. எம்.பி.க் கள் தடுத்து விட்டனர்.
அதேநேரத்தில், தமிழக மக்களின் ஆதரவை பெறுவதற்காக போராட்டம் நடத்துங்கள் என்று மோடி கூறியபடி அ.தி.மு.க. எம்.பி.க்கள் நடந்து கொண்டனர். இந்த பிரச்சினையில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதை போல மோடி செயல்பட்டு விட்டார்.
மிஸ்டர் மோடி அவர்களே, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்து விட்டது. இதேபோல் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த, கோர்ட்டு மூலம் பிரதமர் மோடி தனக்கு சாதகமாக்கி கொள்வார்.
அப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது நியூட்ரினோ ஆய்வு மையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம், மறியல் என என்னுடைய போராட்டம் இருக் காது. வேறு மாதிரியாக இருக் கும். அந்த போராட்டத்தை அறிவிப்பேன். அந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நிபந்தனை உண்டு. அப்பா, அம்மாவுக்கு ஒரே பையனாக இருந்தால் போராட்டத்தில் சேர்க்க மாட்டேன். மது அருந்துபவர்கள் பங்கேற்க கூடாது.
ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருந்தால், ஒருவர் கட்டாயம் போராட்டத்துக்கு வரவேண்டும். என்னுடைய போராட்டம் எப்படி இருக்கும் என்பதை தற்போது அறிவிக்க மாட்டேன். என்னுடைய போராட்ட வியூகம் வேறு மாதிரியாக இருக்கும். நான் முன்கூட்டியே போராட்டத்தை அறிவித்து விட்டால் ராணுவத்தை இறக்கி விடுவார்கள்.
ஆனால் நான் அதற்கும் பயப்பட மாட்டேன். ஏனெனில் இலங்கை வன்னிகாட்டு பகுதிக்கு, துப்பாக்கி சூட்டின் நடுவிலே சென்று வந்தவன். ராணுவத்துக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் உயிரே போனாலும் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த விடமாட்டேன்.
இவ்வாறு வைகோ பேசினார்.