தம்பி இறந்த துக்கத்தில் அக்காள் சாவு

தம்பி இறந்த துக்கத்தில் அக்காள் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2018-04-07 22:00 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு காண்டீபன் வேதாசலம் நகரை சேர்ந்தவர் சம்பத் (வயது 65). பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர். மேலும் அ.தி.மு.க. 23-வது வார்டு வட்டபிரதிநிதியாகவும் இருந்தார்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து நேற்று மாலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அப்போது சம்பத்தின் வீட்டில் செங்கல்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அவரது அக்காள் காந்திமதி (70) தம்பி இறந்த துக்கம் தாங்காமல் கதறி அழுது கொண்டிருந்தார்.

திடீரென அவர் வீட்டிலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உடலை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதைதொடர்ந்து நேற்று மாலை அக்காள், தம்பி இருவரது உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்