காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் விவசாயிகள் ஆற்று மணலில் புதைந்து நூதன போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீரங்கம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சி காவிரி ஆற்றில், மணலில் புதைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், அமைப்புகள் உள்ளிட்டவை சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாலை மறியல், ரெயில் மறியல், கடையடைப்பு என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் நேற்று திருச்சி காவிரி ஆற்றுக்கு வந்தனர். ஆற்றின் நடுவே தண்ணீர் இல்லாத பகுதியில் அய்யாக்கண்ணு உள்பட 16 விவசாயிகளும் சுட்டெரிக்கும் வெயிலில் கழுத்து வரை தங்களது உடலை மணலில் புதைத்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணலில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கழுத்தில் மாலை அணிந்து, நெற்றியில் பட்டை நாமமிட்டு இருந்தனர். அவர்கள் முன்பு மண்டை ஓடுகள் வைக்கப்பட்டு இருந்தன.
மற்ற விவசாயிகள் சட்டை அணியாமல் கழுத்தில் மாலை, நெற்றியில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு, மண்டை ஓடுகளுடன் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பெரியய்யா, ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், காந்திமார்க்கெட் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 41 விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.