வயலில் தரை இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்
ஆயில் கசிந்ததால் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் பேரணாம்பட்டு அருகே திடீரென தரையிறங்கியது.
பேரணாம்பட்டு,
பெங்களூருவில் உள்ள ராணுவ விமான தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் நேற்று காலை சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ ஹெலிகாப்டர் பணிமனைக்கு புறப்பட்டது. பகல் 12.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டரிலிருந்து ஆயில் கசிந்து என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த ஹெலிகாப்டரை தரையிறக்க முடிவு செய்தனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வந்து கொண்டிருந்தது. தரையிறக்க முடியாமல் பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி, குளிதிகை, ஜமீன், பாலாறு பகுதியில் அந்த ஹெலிகாப்டர் வட்டமடித்து கொண்டிருந்தது.
இதுகுறித்து சந்தேகமடைந்த கிராம மக்கள் பேரணாம்பட்டு தாசில்தார் மகாலிங்கத்திற்கும், மேல்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் பகல் 1.40 மணி அளவில் குளிதிகை கிராமத்தில் பாலாறு படுகை பகுதியையொட்டியுள்ள வயலில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் கேப்டன் உள்பட 4 பைலட்டுகள் இருந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தாசில்தார் மகாலிங்கம், குடியாத்தம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, மண்டல துணை தாசில்தார் விஜயன், வட்ட வழங்கல் அலுவலர் ரமாநந்தினி மற்றும் மேல்பட்டி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், 4 பேருக்கும் மதிய உணவு வழங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். வேலூர் சப்-கலெக்டர் செல்வராசும் விரைந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதை அறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இதனிடையே பழுதான ஹெலிகாப்டரை சரிசெய்ய சென்னையில் உள்ள ராணுவ விமானதளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டரில் 6 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் மாலை 4.20 மணி அளவில் குளிதிகை கிராமத்திற்கு வந்தது ஹெலிகாப்டரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 5.10 மணியளவில் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.