வல்லம் ஏரியில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான ஆணை
கணியம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த வல்லம் ஊராட்சி ஏரியில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுப்பதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கணியம்பாடி,
வேலூர் தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கி, 46 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் ரேவதி, கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், வல்லம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு வண்டல் மண்ணை லாரிகள் மூலம் கொண்டு சென்றனர்.