வாய்க்காலில் தண்ணீர் குடிக்க சென்ற போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எருமை மாடு

வாய்க்காலில் தண்ணீர் குடிக்க சென்ற போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எருமை மாட்டை எம்.எல்.ஏ. மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

Update: 2018-04-06 22:30 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி-நாகை சாலையை வழியாக ஆடலரசன் எம்.எல்.ஏ. காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு வாய்க் காலில் கிடந்த சிறிதளவு தண்ணீரை குடிக்க சென்ற எருமை மாடு திடீரென சேற்றில் சிக்கி கொண்டது. இதை பார்த்த அவர், திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) நடராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆடலரசன் எம்.எல்.ஏ., அப்பகுதி மக்கள் கயிற்றை கட்டி சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எருமை மாட்டை 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

மேலும் செய்திகள்