விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை திரும்பப்பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பினை திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்த தீர்ப்புக்கு எதிராக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் அமுதவன் முன்னிலை வகித்தார்.
தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், பெரியார் திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மனிதநேய மக்கள் கட்சி பஷிர், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தமிழ் மாறன், முன்னவன், பொதினிவளவன், செல்வநந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.