அகழியில் விழுந்து ஒட்டகச்சிவிங்கி சாவு
வண்டலூர் பூங்காவில் அகழியில் விழுந்து ஒட்டகச்சிவிங்கி பரிதாபமாக இறந்தது.
வண்டலூர்,
சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவில் பல்வேறு விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகிறது. 1985-ம் ஆண்டு பூங்கா திறந்த பிறகு பல ஆண்டுகளாக பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி இல்லாமல் இருந்தது.
இந்த குறையை போக்கும் வகையில் கடந்த 22.4.1998-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலிப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி ஒட்டகச்சிவிங்கி வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு ஆண் ஒட்டகச்சிவிங்கிக்கு ரகுமான் என்றும், பெண் ஒட்டகச்சிவிங்கிக்கு ஆயிஷா என்றும் வண்டலூர் பூங்கா ஊழியர்கள் பெயர் வைத்து பராமரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஊழியர்கள் ஒட்டகச்சிவிங்கி இருப்பிடத்தை பார்க்கும் போது 2 ஒட்டகச்சிவிங்கி இருக்கும் இடத்தில் ஒரு ஒட்டகச்சிவிங்கி மட்டுமே இருப்பது தெரியவந்தது.
மற்றொரு ஒட்டகச்சிவிங்கி ரகுமானை காணவில்லை, இதனையடுத்து ஊழியர்கள் அதனுடைய இருப்பிடங்களை சுற்றி பார்த்தபோது இருப்பிடத்தின் அருகே உள்ள அகழியில் ரகுமான் ஒட்டகச்சிவிங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஊழியர்கள் பூங்கா உயர் அதிகாரிகள் மற்றும் பூங்கா டாக்டர்களுக்கு தகவல் தந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு அதிகாரிகள், டாக்டர்கள் வந்து பார்த்தபோது ஒட்டகச்சிவிங்கி மூச்சு திணறி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அகழியில் விழுந்து உயிரிழந்த ஒட்டகச்சிவிங்கியின் உடலை நள்ளிரவிலேயே கிரேன் மூலம் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பூங்கா மருத்துவமனையில் டாக்டர்கள் ஒட்டகச்சிவிங்கியை பிரேத பரிசோதனை செய்தனர். இதன் பின்னர் பூங்கா வளாகத்திலேயே பள்ளம் தோண்டி ஒட்டகச்சிவிங்கியை அடக்கம் செய்தனர்.