காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஊட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-04-06 21:45 GMT
ஊட்டி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்து, ஊட்டி நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்