தஞ்சையில், ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் அமைச்சர் துரைக்கண்ணு நாளை திறந்து வைக்கிறார்

தஞ்சையில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தை அமைச்சர் துரைக்கண்ணு நாளை(ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

Update: 2018-04-06 22:00 GMT
தஞ்சாவூர், 

2017-ம் ஆண்டு ஆசியாவிலேயே சிறந்த கருத்தரிப்பு மையத்திற்கான விருதினை பெற்ற ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் தனது 8-வது கிளையை தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே தொடங்க உள்ளது. ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் பழனி, கோவை, சென்னை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், ஈரோடு, பாலக்காடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் 28 ஆண்டுகளாக குழந்தையின்மை சிகிச்சையில் முன்னோடியாக விளங்கி வருகிறது. குழந்தையில்லா தம்பதியினருக்கு ஆலோசனை, கருத்தரித்தல் சிகிச்சைகள், அதிநவீன டெஸ்ட் டியூப் சிகிச்சைகள், ஆண்களுக்கான அதி நவீன சிகிச்சை, உறைநிலை சிகிச்சைகள், லேப்ரோஸ்கோப்பி மற்றும் ஹிஸ்டெரோஸ்கோப்பி பரிசோதனை சிகிச்சைகள், கருமுட்டை கருதான சிகிச்சை, குடும்பக்கட்டுப்பாட்டுக்கு பின் மீண்டும் குழந்தையின்மைக்கு சிகிச்சை, கருமுட்டை பை நீர்க்கட்டி தீர்வு ஆகிய சிகிச்சைகள் சிறப்பான முறையில் செய்யப்படுகிறது.

இந்த மையத்தின் திறப்பு விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதனை அமைச்சர் துரைக்கண்ணு திறந்து வைக்கிறார். இதில் பரசுராமன் எம்.பி., அபி அண்ட் அபி குழும தலைவர் இளங்கோவன், டாக்டர் வரதராஜன், இந்திய மருத்துவ கழக தஞ்சை மைய தலைவர் மாரிமுத்து, செயலாளர் அமிர்தகனி, ராஜ் டி.வி. இயக்குனர் ரவீந்திரன், தொழிலதிபர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் மையத்தின் சிறப்பு டாக்டர்கள் வேலுசாமி, அருண்முத்துவேல், அரவிந்த்சந்தர், ரேஷ்மாஸ்ரீ, மணிப்பிரியா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்