காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பரமக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2018-04-06 22:30 GMT
பரமக்குடி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அதனை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் பரமக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் கார்த்திகன், நகர் செயலாளர் அருள்விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மாணவர் பிரிவு சாரதிராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், துணை தலைவர் பாஸ்கரன், தொகுதி பொறுப்பாளர் தமிழ்வேந்தன், மாவட்ட தலைவர்கள் கண்ணன், நாகூர் உள்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதேபோல பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏராளமான இளைஞர்கள் திடீரென மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து எவ்வித அனுமதியும் பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது என்றும், முறையான அனுமதி பெற்று நடத்துங்கள் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்