பாளையங்கோட்டையில் ரூ.3.84 கோடியில் தொழிலாளர் துறை அலுவலகம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
பாளையங்கோட்டையில் ரூ.3.84 கோடியில் தொழிலாளர் துறை அலுவலகம் காணொளி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நெல்லை,
நெல்லையில் ரூ.3.84 கோடி செலவில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி அந்த கட்டிடத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி குத்துவிளக்கு ஏற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார்.
நெல்லை பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகர் திருமால் நகர் பகுதியில் ரூ.3.84 கோடி செலவில் தொழிலாளர் துறை மூலம் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நேற்று காணொளி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதையொட்டி தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி குத்துவிளக்கு ஏற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் அலுவலக வளாகத்தில் அவர் மரக்கன்று நட்டார்.
பின்னர் கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் சிரமங்களை போக்கும் வகையில் ரூ.3.84 கோடி செலவில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. அலுவலக வளாக கட்டிடம் தரைத்தளம், 2 மாடிகள் உட்பட 3 தளங்களாக 21 ஆயிரத்து 630 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகங்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகங்கள், முத்திரை ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட 17 அலுவலகங்கள் செயல்பட உள்ளது. மேலும் இங்கே ஆய்வு கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் நலவாரியம் தொடர்பான பயன்களை பெறவும், கோரிக்கைகளை தெரிவிக்க வருகை தரவும், வணிகர்கள் எடை கற்கள் மற்றும் எடை கருவிகளில் முத்திரையிட்டு கொள்ளவும் ஏதுவாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு வந்து செல்ல வசதியாக சாலை வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் சரவணன், நெல்லை இணை ஆணையர் ஹேமலதா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் ஹேமாவதி, சிவகாமி, உதவி பொறியாளர்கள் முருகம்மாள், ராஜலட்சுமி, நாகர்கோவில் தொழிலாளர் துணை ஆணையர் சுடலை ராஜ், உதவி ஆணையர்கள் (நெல்லை) ராமகிருஷ்ணன், (நாகர்கோவில்) ஞானசம்மந்தம் மற்றும் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.