8-ம் வகுப்பு இல்லாததால் 1 லட்சம் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டனரா?
மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் கன்ஷியாம் சோனார் என்பவர், மும்பையில் உள்ள பல மாநகராட்சி பள்ளிகளில் 8-ம் வகுப்பு இல்லாததால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிப்பை பாதியில் கைவிட்டதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மராட்டிய மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதுபற்றி கன்ஷியாம் சோனார் கூறுகையில், ‘‘மும்பை மாநகராட்சியிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, மாநகராட்சியில் மொத்தம் உள்ள 1,195 பள்ளிகளில், 850 பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளன.
8-ம் வகுப்பு வசதி இல்லாததன் காரணமாக 2003-04-ம் ஆண்டு முதல் 2009-10-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மும்பை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வியை தொடர முடியாமல் இடைநின்று உள்ளனர்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தை அணுகுவதற்கு முன் மும்பை மாநகராட்சி மற்றும் மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தை அணுகினேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி கல்வி கமிட்டி தலைவர் சுபாதா குடேக்கரிடம் கேட்டதற்கு, அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.