காவிரி பிரச்சினையில் எடப்பாடி அரசு இரட்டை வேடம் போடுகிறது
பாலுக்கு காவல், பூனைக்கு தோழன் என்பதுபோல் காவிரி பிரச்சினையில் எடப்பாடி அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்.;
காட்பாடி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடந்தது. இதனையொட்டி கடைகள் அடைக்கப்பட்டதோடு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடந்தது. நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமையில் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மண்டலக்குழு முன்னாள் தலைவர் சுனில்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.
அப்போது சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அவர்கள் அந்த ரெயிலின் முன்பாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். அதனை தொடர்ந்து அனைவரும் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியினர் கூட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி பிரச்சினையில் எடப்பாடி அரசு இரட்டை வேடம் போடுகிறது. சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. காவல்துறையை கொண்டு அடக்குமுறையை ஏவி விடுவது கண்டிக்கத்தக்கது.
துப்பாக்கியில் உள்ள கடைசி குண்டு தீரும் வரை சுட்டாலும் எங்கள் போராட்டம் நிற்காது. பாலுக்கு காவல், பூனைக்கு தோழன் என்பது போல மத்திய அரசுக்கு காவலாகவும், எங்களுக்கு பூனையாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். தமிழக ஆளுனரை, முதல்-அமைச்சர் சந்தித்தார். இந்த சந்திப்பில் மத்திய அரசு, எடப்பாடி அரசுக்கு ஏதாவது ஆணையிட்டு இருக்கலாம். அதைக்கேட்டு விட்டு அவர்கள் அடிபணிந்து வந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.