காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 89 இடங்களில் ரெயில்-சாலை மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 89 இடங்களில் ரெயில்-சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மற்றும் பல்வேறு கட்சியினர் 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன. இந்த முழு அடைப்பையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை ரெயில் நிலையத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதய குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த துரை மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி ஆகியோர் முன்னிலையில் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் நீலமேகம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், தி.மு.க. நிர்வாகி ஜித்து, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அன்பரசன், நிர்வாகிகள் சீத்தாராமன், பழனியப்பன், கோவி.மோகன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மண்டல செயலாளர் அய்யனார், ஒரத்தநாடு குணசேகரன், பெரியார் செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, ம.தி.மு.க. நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பேச்சாளர் விடுதலைவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் தலைமையில் தி.மு.க. மகளிர் தொண்டரணியை சேர்ந்த காரல்மார்க்ஸ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராம நாதன் மற்றும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சை கணபதி நகர் அருகே எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை காலை 9.45 மணிக்கு மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் மாவட்ட செயலாளர் நீலமேகம், முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் மாலதி, கண்ணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். 1¼ மணி நேரம் அவர்கள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ரெயிலை செல்ல விடாமல் ரெயிலுக்கு முன்னதாக 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் பின்னால் ரெயில் வந்தது. இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டனர்.
இதேபோல் அயனாபுரத்தில், மன்னார்குடி-மானாமதுரை ரெயிலையும், சோளகம்பட்டியில், திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலையும், பூதலூரில், திருச்சி-சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலையும், பாபநாசம், கும்பகோணத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலையும், செக்காங்கண்ணியில் மயிலாடுதுறை- திருநெல்வேலி பயணிகள் ரெயிலையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் மொத்தம் 80 இடங்களில் பஸ் மறியல் போராட்டமும், 9 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும் நடந்தது. இதில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், அன்பழகன், கோவி.செழியன் உள்பட 3 ஆயிரத்து 370 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே போல் 9 இடங்களில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. உள்பட 685 பேரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் நடந்த ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் 4 ஆயிரத்து 55 பேர் கைது செய்யப்பட்டனர்.