காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,800 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. காவிரி நீரை நம்பியே விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தண்ணீர் பிரச்சினையால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே விவசாயத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் தேவா, கலியபெருமாள், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, நகர காங்கிரஸ் தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் நாகை-தஞ்சை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல மன்னார்குடி பஸ் நிலையம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர். கோட்டூர் பஸ் நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடிருந்த போலீசார், மறியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
பெருகவாழ்ந்தான் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை தாங்கினார். அப்போது சாலையின் நடுவில் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 300 பேரை பெருகவாழ்ந்தான் போலீசார் கைது செய்தனர். இதனால் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்னிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பேரளத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வரத.கோ.ஆனந்த் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 70 பேரை பேரளம் போலீசார் கைது செய்தனர். பூந்தோட்டம் மெயின்ரோட்டில் நன்னிலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மனோகரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 75 பேரை நன்னிலம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல நன்னிலத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. வார்டு பிரதிநிதி ராஜ் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். காக்காகோட்டூரில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையில் சாலை மறியலில் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிப்பந்தலில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். அப்போது விவசாயி ஒருவரை நடுரோட்டில் படுக்க வைத்து மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பேரளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 25 பேரை பேரளம் போலீசார் கைது செய்தனர்.
வலங்கைமான் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல நீடாமங்கலத்தில் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் விசு.அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் தலைமையில் ஒளிமதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 110 பேரை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள கமலாபுரத்தில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் குமரேசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 60 பேரை வடபாதிமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியலால் மன்னார்குடி-திருவாரூர் சாலையில் 50 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மறியல் ஈடுபட்ட 100 பேரை கொரடாச்சேரி போலீசார் கைது செய்தனர். இதனால் திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் லெட்சுமாங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 55 பேரையும், குடிதாங்கிச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 12 பேரையும் கூத்தாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
குடவாசல் பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு குடவாசல் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 67 பேரை குடவாசல் போலீசார் கைது செய்தனர். இதேபோல குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். எரவாஞ்சேரி அருகே உள்ள கூந்தலூரில் நடந்த சாலை மறியலுக்கு தி.மு.க. ஊராட்சி செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 20 பேரை எரவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். இதில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் இடும்பாவனம் கடைதெருவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஆலங்காடு கடைதெருவில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சித்திரவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர். நாச்சிக்குளம் கடைத்தெருவில் தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பாண்டி கடைதெருவில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்பழகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
எடையூர் சங்கேந்தி கடைதெருவில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர். திருமக்கோட்டை அருகே உள்ள பைங்காநாட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 40 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,800 பேர் கைது செய்யப் பட்டனர்.