ராசிபுரத்தில் மறியல் செய்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 75 பேர் கைது

ராசிபுரம்,
ராசிபுரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு தி.மு.க. காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்பட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் நகர தி.மு.க.செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி அரங்கசாமி, முன்னாள் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு, ம.தி.மு.க.நகர செயலாளர் ஜோதிபாசு, நகர காங்கிரஸ் தலைவர் முரளி, மாவட்ட தி.மு.க.வர்த்தக அணி துணை தலைவர் தவசி நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் கவுன்சிலர்கள் ராஜம்மாள், காதர்பாட்சா, மலர்விழி சம்பத், நகர தி.மு.க.அவைத் தலைவர் அமிர்தலிங்கம், துணை செயலாளர்கள் ஆனந்தன், ரவிச்சந்திரன், மேட்டுத் தெரு மோகன், தமிழக முஸ்லீம் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகமது சபீர், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் ராஜாமுகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச குழுவைச் சேர்ந்த எம்.ஜி.ராஜகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சண்முகம், வக்கீல்கள் சக்கரவர்த்தி, கீதாலட்சுமி உள்பட 150–க்கும் மேற்பட்டவர்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் கையில் கட்சிக் கொடியை ஏந்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். அவர்கள் ராசிபுரம் டவுன் ஆத்தூர் சாலையில் உள்ள சாவடி அருகே வந்தபோது ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதைக் கண்டித்து அவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். சாலை மறியல் செய்ததாக 70 பேர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.