ராணுவ கண்காட்சிக்காக ஏவுகணைகள், பீரங்கிகள் வருகை
திருவிடந்தையில் நடைபெற உள்ள ராணுவ கண்காட்சிக்காக ஏவுகணைகள், பீரங்கிகள் கொண்டு வரப்பட்டன.
மாமல்லபுரம்,
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழகத்தில் முதல், முறையாக ராணுவ கண்காட்சி வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ரூ.480 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் ராணுவ தளவாட பொருட்கள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், சிறு நிறுவன தயாரிப்புகளுக்கான அரங்குகள் இடம் பெறுகின்றன. ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
ராணுவ கண்காட்சி நடைபெறும் இடத்தில் அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே போலீசார் தற்போது அனுமதித்து வருகின்றனர். கண்காட்சியில் இடம் பெற மராட்டியம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள ராணுவ பயிற்சி மையங்களில் இருந்து பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் ராணுவ தளவாட பொருட்கள் நேற்று லாரி மூலம் பலத்த பாதுகாப்புடன் திருவிடந்தைக்கு வந்து சேர்ந்தன.
மேலும் கடலோர காவல் படை ரோந்து படகுகளும் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. விமான சாகசங்களை பார்ப்பதற்காக திருவிடந்தை கடற்கரையையொட்டி அமரும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது ராணுவ கண்காட்சி நடைபெறும் பகுதி முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு பரிவு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரவை, பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
ராணுவ கண்காட்சி நடைபெறும் இடத்தில் பணியில் இருந்த அரசு ஊழியர் ஒருவர் நேற்று மயங்கி விழுந்தார். அவரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது அங்கு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.