நாகர்கோவிலில் குடிக்க தண்ணீர் கேட்பதுபோல் நடித்து பெண்ணிடம் 2½ பவுன் நகை பறிப்பு
நாகர்கோவிலில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 2½ பவுன் நகையை பறித்து சென்ற 2 மர்ம பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மூவேந்தர்நகர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சரோஜா (வயது 42). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பெண்கள் திடீரென சரோஜாவின் வீட்டின் முன் வந்து அவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.
உடனே சரோஜாவும் வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 பெண்களில் ஒருவர் சரோஜா கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ந்து போன சரோஜா கூச்சலிட்டார். உடனே அந்த 2 பெண்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த பெண்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் நகையை பறித்து சென்ற 2 மர்ம பெண்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனரா? என்றும் சோதனை செய்தனர்.
குடிக்க தண்ணீர் கேட்பதுபோல் நடித்து நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம பெண்களை தேடி வருகிறார்கள்.