திருச்சி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; வீதிகள் வெறிச்சோடின ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதித்தது.
திருச்சி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, ஏப்ரல் 5-ந் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. திருச்சியின் வர்த்தக பகுதியான என்.எஸ்.பி.ரோடு, சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், மெயின்கார்டுகேட், மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், தில்லைநகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால், அப்பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வழக்கமாக 24 மணிநேரமும் செயல்படும் காந்திமார்க்கெட்டும் செயல்படாததால் அந்த பகுதியும் பரபரப்பு இன்றி காணப்பட்டது. இதேபோல் திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருந்தன. டீக்கடை, பெட்டிக்கடைகள் கூட இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், திருச்சியில் வழக்கமாக இயங்கும் பஸ்களை விட நேற்று குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கும் என வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.