புழல் ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
புழல் ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை கொசப்பூர் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளஞ்சோழன். இவருடைய மகள் நிவேதா(வயது 18). இவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார்.
இவர், நேற்றுமுன்தினம் மாலை புழல் ஏரிக்கு சென்றார். மதகு அருகே சென்ற அவர் திடீரென ஏரிக்குள் குதித்து விட்டார். நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், செங்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் புழல் ஏரிக்கு விரைந்து சென்று நிவேதா உடலை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
நேற்று காலை நிவேதா உடல் ஏரியில் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீசார், ஏரியில் மிதந்த கல்லூரி மாணவி நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி நிவேதா காதல் தோல்வியால் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.