துறைமுக வழித்தடத்தில் மான்கூர்டு- பன்வெல் இடையே மின்சார ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பு
மான்கூர்டு- பன்வெல் இடையே மின்சார ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பால் பயண நேரம் 15 நிமிடம் குறையும்.;
மும்பை,
துறைமுக வழித்தடத்தில் மான்கூர்டு- பன்வெல் இடையே மின்சார ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் பயண நேரம் 15 நிமிடங்கள் வரை குறையும்.
மும்பையில் மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.- பன்வெல் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சி.எஸ்.எம்.டி.- பன்வெல் இடையே பயணிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. தற்போது 80 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், மின்சார ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
இதன்படி துறைமுக வழித்தடத்தில் மான்கூர்டு- பன்வெல் இடையே மின்சார ரெயில்களை 105 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய ரெயில்வே மும்பை கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சி.எஸ்.எம்.டி.- மான்கூர்டு இடையே மின்சார ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க சாத்தியமில்லை. எனவே மான்கூர்டு- பன்வெல் இடையே மின்சார ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய ரெயில்வே தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் கேட்டு உள்ளோம்.
இதற்கான அனுமதி கிடைத்த பின்னர் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்வார். அதன்பின்னர் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். இதன் மூலம் சி.எஸ்.எம்.டி.- பன்வெல் இடையே பயண நேரம் 15 நிமிடங்கள் வரை குறையும் என அவர் கூறினார்.