இன்று முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பா? டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பதில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று புதுச்சேரி வந்தார்.;

Update: 2018-04-04 23:45 GMT
புதுச்சேரி,

கடலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று புதுச்சேரி வந்தார். 100 அடி ரோட்டில் உள்ள சன்வே ஓட்டலில் சிறிது நேரம் அவர் ஓய்வு எடுத்தார். அப்போது நிருபர்களிடம் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அ.தி.மு.க. அமைச்சர்கள் எங்களை விமர்சனம் செய்து வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் மத்தியில் சிறந்த பெயரை பெற்று வருகிறது’ என்றார்.

தொடர்ந்து தினகரன் எம்.எல்.ஏ.விடம், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க. சார்பில் நாளை (இன்று) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பீர்களா?’ என்று நிருபர்கள் கேட்ட போது, ‘முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி எங்களுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாரா? என்று அவரிடம் கேளுங்கள்’ என்றார். 

மேலும் செய்திகள்