3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வருகை - அரசு உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.;
பெங்களூரு,
3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் ஏற்பாட்டு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகத்திற்கு வருகை தந்தனர்.
பெங்களூரு சேஷாத்திரி ரோட்டில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத், மக்களிடையே தேர்தல் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அம்சங்களை வெளியிட்டார். இதில் இந்திய தேர்தல் கமிஷனர்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் சட்டசபை தேர்தல் ஏற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது, தேர்தலில் முறைகேடுகளை தடுப்பது, நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தேர்தலை நடத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.