மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் 60 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கண்டோன்மெண்ட் போலீஸ் சரக உதவி கமிஷனர் சச்சினாந்தம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலைய போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோவையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 10.55 மணிக்கு வந்து திருச்சி ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் மறைந்து இருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.திராவிட மணி தலைமையில், அக்கட்சியினர் கைகளில் கட்சி கொடிகளுடன் ரெயிலை மறித்து போராட்டம் நடத்த ஓடி வந்தனர்.
இதனை கண்ட போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரின் பிடியில் சிக்காமல் ரெயில் முன்பு நின்று மறியல் செய்தனர். பின்னர் ரெயில் என்ஜின் மீது ஏறிய அவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது ஒருவர் தண்டவாளத்தில் படுத்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் குண்டு, கட்டாக தூக்கி தண்டவாளத்தை விட்டு வெளியேற்றினர். அப்போது நடைமேடையில் இருந்து ரெயில் நிலையத்தின் வெளியே வருவதற்குள், அவர்கள் நடைமேடையில் அமர்ந்தும், படுத்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து 2 வேன்களில் ஏற்ற முயன்றனர். அப்போது திடீரென்று அவர்கள் மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து, வேன்களில் ஏற்றி கருமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.