காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருவாரூரில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.;
திருவாரூர்,
திருவாரூர் பஸ் நிலையம் அருகில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள், வணிகர்கள் உள்பட அனைவரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இதில் ஆர்வத்துடன் பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரும் கையெழுத்து போட்டனர். இதில் கட்சியின் நகர தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வதுரை, மாவட்ட துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், வட்ட தலைவர்கள் ஞானராஜ், ஜார்ஜ் மன்னன், நிர்வாகி சத்தியகாமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கட்சியின் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 10 ஆயிரம் பேரிடம் கையெழுத்தும், கல்லூரி மாணவர்கள் மூலம் மின்அஞ்சலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.