ஒக்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலைய பணிகளை கலெக்டர் ஆய்வு
ஒக்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலைய பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் நரிமணம் கிராமத்தில் உள்ள சோடியம் சிலிக்கேட் தயாரிக்கும் ஆலையினையும், ஓக்கூர் கிராமத்தில் நடைபெற்று வரும் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளையும் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நரிமணத்தில் அமைந்துள்ள கிரண் குளோபல் கெம் லிமிடெட் நிறுவனத்தில் சோடியம் சிலிகேட் என்ற பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் அமைந்துள்ள 3 உலைகளில் ஒரு உலை மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 2 உலைகள் “சிலிக்கா“ மூலப்பொருள் பற்றாக்குறையின் காரணமாக இயக்காமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு உலைகளும் இயங்கும் வகையில் சிலிக்கா மூலப்பொருள் கிடைக்கப்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒக்கூர் கிராமத்தில் நாகை பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 2-க்கு 150 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க உத்தேசித்து அதற்காக மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளது. இந்த அனுமதிகளை கொண்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் நிறுவுதல் இசைவாணை 8.8.2011, நடப்பாணை மூலம் பெற்று 31.12.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 1-க்கு 150 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் நிறுவும் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு இந்த அனல்மின் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜா, உதவிபொறியாளர் விஜயபிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.