காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் முடிவின்படி, டெல்டா மாவட்ட தலைநகரங்களில் நேற்றுமுன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார செயலாளர்கள் பாலசண்முகம், தாமோதரன், சண்முகசுந்தரம், இளங்கோவன், ரவிச்சந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து மாவட்டச்செயலாளர் லட்சுமிநாராயணன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.