காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்-வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம்-வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பைரவநாதன், வட்ட செயலாளர் தியாகராஜன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் அசோக், நிர்வாகிகள் மூர்த்தி. பிரகாஷ், சின்னையன், சண்முகம், விஜய் ஆனந்த், கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
இதேபோல திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் மணிவண்ணன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரவிதாஸ் முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர்.
வலங்கைமான் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட பொருளாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், மாவட்ட துணைத்தலைவர் ராஜசேகரன், வருவாய்த்துறை சங்க மாவட்ட துணைத் தலைவர் ரவி, வட்ட தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.