ஆடிட்டர் குருமூர்த்தி வீடு முற்றுகை: சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட சென்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-04 22:00 GMT
அடையாறு,

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பல போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி உள்ளார்.

இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக அரசை திரைமறைவில் இருந்து தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி வருவதாகவும், இதனால் இங்கு ஒரு அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும், இதை கண்டித்து நேற்று காலை சென்னை மயிலாப்பூர் தியாகராயபுரத்தில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிடுவதற்காக சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தையுடன் அங்கு சென்றார்.

இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் மாணவி நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவரை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் எச்சரித்து விடுவித்தனர். 

மேலும் செய்திகள்