ஆதரவற்றோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு
மராட்டியத்தில் ஆதரவற்றோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவிகரம் நீட்டும் வகையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கடந்த ஜனவரியில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தந்தை, தாய் அல்லது உறவினர்களை அடையாளம் காண முடியாதவர்களும், தாங்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறியாதவர்களும் ஆதரவற்றவர்கள் என கருதப்படுவர்.
அவர்களுக்கு அரசு மூலம் ஆதரவற்றோருக்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் கல்வி, வேலைவாய்பில் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள்.
இந்த அரசாணையின் படி ஆதரவற்றோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு யாரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் மட்டுமே இந்த இடங்கள் மற்றவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்