நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 6 நாட்கள் கொங்கன் வழியாக இயங்கும்

சோலாப்பூர் அருகே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 நாட்கள் கொங்கன் வழியாக இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்து உள்ளது.

Update: 2018-04-03 22:44 GMT
மும்பை,

மும்பை- நாகர்கோவில் இடையே சேலம், ரேனிகுண்டா என இரண்டு மார்க்கங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள சோலாப்பூர்- டான்ட் ரெயில் செக்சனில் வாகவ்-மதா-வாட்சிங்கே ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 நாள் கொங்கன் வழியாக திருப்பி விடப்படுகிறது.

இதன்படி வருகிற 5-ந்தேதி (நாளை) மற்றும் 8-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி புறப்படும் எக்ஸ்பிரஸ் (வண்டிஎண் 16352), வருகிற 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ்(16340) ஆகிய ரெயில்கள் ஈரோட்டில் இருந்து சோரனூர் ஜங்ஷன், மங்களூர் ஜங்ஷன், மட்காவ், ரோகா வழியாக மும்பையை வந்தடையும்.

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 6-ந்தேதி மற்றும் 8-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் (16339), 7-ந் தேதி மற்றும் 10-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ்(16351) ரோகா, மட்காவ், மங்களூர் ஜங்ஷன், சோரனூர் ஜங்ஷன், ஈரோடு ஜங்ஷன், மதுரை ஜங்ஷன் வழியாக நாகர்கோவில் சென்றடையும்.

இந்த தகவல் கொங்கன் ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்