உதவி சப்-இன்ஸ்பெக்டரின் மகனிடம் தகாத செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது

உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகனிடம் தகாத செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-03 22:21 GMT
மும்பை,

மும்பை கல்பாதேவி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் பிரமோத் தோம்ரே (வயது50). இவர் முல்லுண்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே கட்டிடத்தில் தானே போலீஸ் நிலையத்தை சேர்ந்த உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று பிரமோத் தோம்ரே வீட்டிற்கு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் 15 வயது மகன் வந்திருந்தான்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த பிரமோத் தோம்ரே சிறுவனின் ஆடைகளை களைந்து தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்தான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், முல்லுண்டு போலீஸ் நிலையத்திற்கு மகனை அழைத்து சென்றுபுகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் பிரமோத் தோம்ரேவை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்