காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுச்சேரி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நேற்று புதுவை சுதேசி மில் அருகே உண்ணாவிரதம் நடந்தது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புதுவை மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தில் நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், மாநில இணைசெயலாளர் கணேசன், நிர்வாகிகள் பாப்புசாமி, ஞானவேலு, அன்பழகன் உடையார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதத்தின்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
காவிரி பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துக்கட்சி கூட்டம், சட்டமன்ற சிறப்புக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
ஆனால் புதுவையில் ஆளும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமான நிலைப்பாடு காரணமாக எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காலக்கெடு முடிய 2 தினங்கள் இருக்கும்போது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று வீரவசனம் பேசினார்.
ஆனால் அதை செய்யவில்லை. கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்க வில்லை. எனவே அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். கோர்ட்டு அவமதிப்பு வழக்கு என்பது சட்டமன்றத்தில் எடுத்த முடிவாகும். அதற்கு அனுமதி மறுப்பது கவர்னரின் வேலையில்லை. மாநில உரிமையை முன்னெடுத்து செல்ல தடைவிதிக்க கவர்னர் யார்?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக அரசு நெஞ்சுறுதியுடன் தொடுத்து உள்ளது. ஆனால் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்ற அவமதிப்பை மத்திய அரசு மீது தொடுக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறார்.
புதுவையில் அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு காலம் கடந்து மனமில்லாமல் அ.தி.மு.க.விற்கு அழைப்பு அனுப்பினார். ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடியாத கண்துடைப்பு நாடகமாக கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.