மும்பை மாடல் அழகி மீது தாக்குதல் கன்னட நடிகர் கிரண் ராஜ் கைது
பெங்களூருவில், காதலித்து கணவன், மனைவிபோல் ஒரே வீட்டில் வசித்து வந்ததோடு, திருமணத்துக்கு வலியுறுத்திய மும்பை மாடல் அழகியை தாக்கியதாக கன்னட நடிகர் கிரண் ராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெங்களூரு,
கன்னட திரைப்படங்களில் நடித்து வருபவர் கிரண் ராஜ்(வயது 25). இவர், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் சன்னசந்திராவில் வசித்து வருகிறார். கிரண் ராஜிக்கும், மும்பையை சேர்ந்த 24 வயது நிரம்பிய மாடல் அழகிக்கும் மும்பையில் வைத்து பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மாடல் அழகியிடம், கிரண் ராஜ் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் ராஜராஜேஸ்வரி நகரில் ஒரே வீட்டில் கணவன், மனைவிபோல் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கிரண் ராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாடல் அழகி கூறியுள்ளார். இதற்கு கிரண் ராஜ் மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது. இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கோபமடைந்த கிரண் ராஜ், மாடல் அழகியை தனது காரில் அழைத்து சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவரை நண்பரின் வீட்டில் சிறை வைத்தும் கிரண் ராஜ் தாக்கியதாக தெரிகிறது. அத்துடன், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க கூடாது எனக்கூறி மாடல் அழகியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரிடமிருந்து தப்பித்த மாடல் அழகி மும்பைக்கு சென்றார்.
கிரண் ராஜ் தாக்கியதில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சைகள் பெற்று கொண்ட அவர் மீண்டும் பெங்களூரு வந்து கிரண் ராஜின் பெற்றோரை சந்தித்து சம்பவம் குறித்து கூறியுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மாடல் அழகி, காதலித்து ஒரே வீட்டில் வாழ்ந்துவிட்டு திருமணத்துக்கு மறுப்பதாக கிரண் ராஜ் மீது ராஜராஜேஸ்வரி நகர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று கிரண் ராஜை கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.