காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோவையில் ரெயிலை மறித்து போராட்டம்; தி.மு.க., மனித நேய மக்கள் கட்சியினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோவையில் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் 240 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் தி.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை ரெயில் நிலையம் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் திட்டமிட்டபடி தி.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் அங்கு குவிந்தனர். அவர்கள் போலீஸ் பாதுகாப்பையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். அங்கு கோராக்பூர் புறப்பட தயாராக இருந்த ரப்தி சாகர் விரைவு ரெயிலை மறித்தனர். அப்போது சிலர் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, பொருளாளர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அகமது கபீர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 240 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை சித்ராவில் உள்ள விமான நிலையத்தை முற்றுகை இடப்போவதாக தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.வினர் அறிவித்து இருந்தனர்.இதைதொடர்ந்து கோவை மாநகர் தெற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் ம.தி,மு.க.வை சேர்ந்தவர்கள் சித்ரா பகுதியில் திரண்டனர். பின்னர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி விமான நிலையத்தை முற்றுகையிட புறப்பட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நா.கார்த்திக் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் பழனியப்பன், வக்கீல் அருள்மொழி, ம.தி.மு.க. பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளிங்கிரி, செயற்குழு உறுப்பினர் பயணியர் தியாகு உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்
கோவை மாநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாக்கவுண்டர் தலைமையில் அவினாசி சாலையில் உள்ள தொட்டிபாளையம் பிரிவில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் பொன்னுசாமி, பூபதி, ராஜன், ராஜகோபால், ரகுபதி உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் தி.மு.க.வினர் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு துடியலூர் பகுதி செயலாளர் சுந்தரம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மாலதி, வெள்ளக்கிணர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அருள்குமார் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு மாவட்டம் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் நேற்று காலை சூலூர் முத்து கவுண்டன்புதுரில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ் மணி தலைமை தாங்கினார். அப்போது கோவையில் இருந்து சேலம் சென்ற பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த செல்லமுத்து உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.