காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மண்சோறு சாப்பிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூரில் மண்சோறு சாப்பிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் மண்சோறு சாப்பிடும் போராட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பண்ருட்டி தலைவர் தனுஷ்பத்மா, மாவட்ட துணை தலைவர் தில்லைநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் கடலூர் பஸ்நிலையத்தில் உள்ள நாகம்மன்கோவில் முன்பு தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டனர்.
இந்த போராட்டத்தில் குறிஞ்சிப்பாடி தலைவர் தில்லைநாயகம், பண்ருட்டி மகளிர் அணி தலைவி பிரேமா, மாவட்ட துணை பொதுச்செயலாளர் ராமலிங்கம், மகளிர் அணி துணை தலைவி தமிழ்செல்வி, பண்ருட்டி ஒன்றிய தலைவர் செல்வராஜூ, விருத்தாசலம் தலைவர் அமரேசன், சிதம்பரம் தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாவட்ட தலைவர் சந்தோஷ் நிருபர்களிடம் கூறும்போது, காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திரமோடி நல்ல எண்ணத்துடன் தமிழக மக்கள், விவசாயிகள் நலன் கருதி காவிரிமேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என கோரியும் இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறோம் என்றார்.