பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு சம்பள பாக்கி பட்டுவாடா செய்யப்பட்டது

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2018-04-03 20:52 GMT

பெங்களூரு,

கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பில் சமையல், தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட வேலைகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர்களுக்கு குறைந்தபட்ச தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு முதல், கைதிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால் வங்கி கணக்கு தொடங்குவதில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் கடந்த 2 ஆண்டுகளாக கைதிகளுக்கு சம்பள பணம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து சிறை கைதிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் கைதிகளுக்கு 2017–18 நிதியாண்டில் வழங்கவேண்டிய ரூ.84 லட்சம் சம்பள பாக்கியை விடுவித்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அந்த பணம் கைதிகளிடம் வழங்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்