ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் குளறுபடி: 6 ஆயிரம் மனுக்களுடன் தாலுகா அலுவலகத்துக்கு வந்த எம்.எல்.ஏ.
ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் குளறுபடி இருப்பதாக, பொதுமக்கள் கொடுத்த 6 ஆயிரம் மனுக்களுடன் தாலுகா அலுவலகத்துக்கு வந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வால் பரபரப்பு ஏற்பட்டது.
களியக்காவிளை,
பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் சீனி, மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாத வருமானம் குறைவாக உள்ளவர்கள், மாத வருமானம் அதிகமாக உள்ளவர்கள் என்பது உள்பட 5 வகையாக ரேஷன் கார்டுகளை பிரித்து வழங்கப்படுகிறது. இதில் ஏழை ஓய்வூதியதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மட்டும் வழங்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதுபோல் ஏராளமான பயனாளிகளுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் அடியோடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் பாதிக்கப்பட்ட கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மக்கள், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் மனுவாக கொடுத்தனர்.
அவ்வாறு பொதுமக்கள் கொடுத்த 6 ஆயிரம் மனுக்களுடன் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நேற்று விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த அதிகாரியிடம் மனுக்களை ஒப்படைத்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரேஷன் கார்டுகளை வருமானத்தின் அடிப்படையில் 5 விதமாக பிரித்து ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் கார்டுகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையான பயனாளிகளுக்கு அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களின் மனுக்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர் உள்பட பலர் உடனிருந்தனர்.
இந்த சம்பவத்தால் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.