பண்டரிநாதன் கோவிலில் திருட்டு போன ஐம்பொன் சிலை மீட்பு பக்தர்கள் பரவசம்
கரூர் அருகே பண்டரிநாதன் கோவிலில் திருட்டு போன ஐம்பொன் சிலை மீட்கப்பட்டதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
கரூர்,
கரூர் அருகே பெரியகுளத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புகுந்து மூலவர் சன்னதியில் இருந்த உற்சவர் ஐம்பொன் சிலையை திருடி விட்டு உண்டியலில் தங்களது கைவரிசையை காட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். உற்சவர் சிலை திருட்டு போனதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோவிலில் சாமி புறப்பாடு மற்றும் விழாக்காலங்களில் உற்சவர் சிலை தான் வீதிஉலா வருவது வழக்கம். சிலை திருட்டு போன நாள் முதல் பக்தர்கள் மனம் கவலைக்குள்ளானது.
இந்த நிலையில் பண்டரிநாதன் கோவில் எதிர்புறம் 100 மீட்டர் தூரத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே புதர் பகுதியில் ஆடு, மாடுகளை சரஸ்வதி (வயது 60) மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது புதரில் பண்டரிநாதன் கோவில் உற்சவர் ஐம்பொன் சிலை கிடப்பதை கண்டார். அவர் இது குறித்து உடனடியாக கோவில் நிர்வாகத்தினரிடமும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கிடந்த சிலையை கண்டதும் பக்தர்கள் பரவசமடைந்து வழிபட்டனர். உடனடியாக சிலையை மீட்டு கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
கோவில் நுழைவு வாயில் முன்பு சிலையை வைத்து மல்லிகை பூ மாலை அணிவித்தனர். சிலை கிடைத்த தகவல் காட்டுத்தீ போல அந்த பகுதி பக்தர்களிடம் பரவியது. பக்தர்கள் விரைந்து வந்து தரிசனம் செய்தனர். இதற்கிடையில் சிலை மீட்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
சிலையை புதரில் வீசிச்சென்ற மர்மநபர்கள் யார்? என தெரியவில்லை. அந்த இடத்தில் நேற்று முன்தினம் இரவு தான் மர்மநபர்கள் வீசிச்சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் சிலையை திருடிய நபர்களே மனம் திருந்தி கோவில் அருகே புதரில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர். மீட்கப்பட்ட சிலையை கோர்ட்டில் ஒப்படைத்து மீண்டும் கோவிலில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். திருட்டு போனை சிலை மீட்கப்பட்டதால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.