காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து 6 ஆயிரம் கடைகள் அடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று திருவாரூர் நகரில் பெரும்பாலான வணிகர்கள் கடைகளை அடைத்து இருந்தனர். கடை அடைப்பினால் எந்த நேரமும் பரப்புமிகுந்த கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், காவிரி டெல்டா விவசாயிகள் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நீர் இருந்து வருகிறது. எனவே விவசாயத்தை பாதுகாத்திட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இல்லையென்றால் வணிகர்கள் டெல்லி சென்று நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து மனு அளிப்பதுடன், தொடர் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நன்னிலத்தில் அனைத்து கடை களும் அடைக்கப்பட்டிருந்தன. கோட்டூரில் 189 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நீடாமங்கலத்திலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதேபோல கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, அம்மையப்பன், முகந்தனூர், குளிக்கரை, கமலாபுரம், பொதக்குடி, அத்திக்கடை உள்ளிட்ட கூத்தாநல்லூர் சரக பகுதிகளில் வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மன்னார்குடியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெரியகடைத்தெரு வெறிச்சோடி கிடந்தது. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.