மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரெயில் மறியல் முயற்சி; 30 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் ரெயில் மறியல் செய்ய முயற்சி செய்தனர். இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும், உடன் வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் காவிரி டெல்டா அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தஞ்சையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க புண்ணியமூர்த்தி தலைமையில் கவுரவ தலைவர் திருப்பதி வாண்டையார், மாநில துணை செயலாளர் மணி ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் ரெயில் மறியல் செய்வதற்காக ரெயில் நிலையம் அருகே திரண்டனர்.
பின்னர் அவர்கள் திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே நின்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேனில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.