மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ரெயில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
காஞ்சீபுரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சுந்தர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் ஜி.சுகுமார், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பி.சேகர், சாலவாக்கம் குமார் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரத்தில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் காஞ்சீபுரம் நகர செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் திரண்டு வந்து மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் காங்கிரஸ் , ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எம்.எல்.ஏ.புகழேந்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோனிஸ்டாலின் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தார்.
செய்யூர் எம்.எல்.ஏ. அரசு தலைமையில் 75-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், ஜெயகுமார் ஆகியோர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமிமதுசூதனன் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். முன்னதாக அவர்கள் செங்கல்பட்டு புதிய பஸ்நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
மறைமலைநகர் ரெயில் நிலையத்தில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலை காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.கே.தண்டபாணி, மறைமலைநகர் தி.மு.க நகர செயலாளர் ஜெ.சண்முகம் ஆகியோர் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் ரெயிலை மறித்தனர். பின்னர் ரெயில் என்ஜின் மீது ஏறி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து மறைமலைநகர் நகராட்சி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த ரெயில் மறியல் போராட்டம் காரணமாக அந்த வழித்தடத்தில் ரெயில்கள் ½ மணி நேரம் காலதாமதமாக சென்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.