காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் அ.தி.மு.க. வினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-04-03 22:45 GMT
புதுக்கோட்டை,

மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் , கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதையொட்டி புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்