நகராட்சிகளுக்கு கமிஷனர்களையே தனி அதிகாரியாக நியமிக்கும் நடைமுறையில் மாற்றம் தேவை: தமிழக அரசுக்கு கோரிக்கை
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் நகராட்சிகளுக்கு கமிஷனர்களையே தனி அதிகாரியாக நியமிக்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வாய்ப்பு இல்லாத நிலையில் நகராட்சிகளுக்கு கமிஷனர்கள் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்து வந்த நிலையில் வார்டு சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று உறுதி சொல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் நகராட்சி கமிஷனர்களே தனி அதிகாரிகளாக செயல்பட்டு வருவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் நகராட்சி எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட கலெக்டரே தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது இதே சூழ்நிலையில் 4 நகராட்சிகளுக்கு ஒரு உயர் அதிகாரி தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் நகராட்சிகளின் நிர்வாக நடவடிக்கைகள் முறையாக கண்காணிக்கப்பட வாய்ப்பு இருந்தது. நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காண வாய்ப்பு ஏற்பட்டு வந்தது.
தற்போது உள்ள நிலையில் நகராட்சி கமிஷனர்களே தனி அதிகாரியாக செயல்பட்டு வருவதால் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்பதில் பிரச்சினை ஏற்படுவதுடன் நிர்வாக நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகளும் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 5 மாதங்களுக்கு உள்ளாகவே சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும் சூழ்நிலை உருவாகி நகரசபை கமிஷனர், என்ஜீனியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் தான்.
எனவே தமிழக அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவிக்கு வரும் வரை நகராட்சிகளுக்கு கமிஷனர்களையே தனி அதிகாரிகளாக நியமிக்கும் நடைமுறையில் மாற்றம் செய்து பிறதுறைகளில் இருந்து ஒரு உயர் அதிகாரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளுக்கு தனிஅதிகாரியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.