வியாசர்பாடியில் ரவுடியை வெட்டிய 6 பேர் கைது
வியாசர்பாடியில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் உதயசூரியன் நகர் 10-வது பிளாக்கை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 24). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் வரதையபாளையத்தில் வியாசர்பாடியை சேர்ந்த பிரபு என்கிற பப்லு என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
இந்தநிலையில் வியாசர்பாடி சாமியார்தோட்டம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த அரிகிருஷ்ணனை மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பி விட்டது. படுகாயம் அடைந்த அரிகிருஷ்ணனுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக வியாசர்பாடி பகுதியில் பதுங்கி இருந்த 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள், கொடுங்கையூரை சேர்ந்த வாத்து என்கிற பிரதிப் (25), செங்குன்றத்தை சேர்ந்த வினோத் (25), வியாசர்பாடி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (25), செங்குன்றத்தை சேர்ந்த யுவராஜ் (25), கொடுங்கையூரை சேர்ந்த ஜான் (25), வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் என்கிற வெட்டு கார்த்திக் (25) என்பது தெரியவந்தது.
இவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், ஆந்திராவில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பிரபு என்கிற பப்லுவின் அக்காள் மகன் வாத்து என்கிற பிரதிப் என்பதும், பழிக்குப்பழி வாங்குவதற்காக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிகிருஷ்ணனை வெட்டியதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும், 3 அரிவாள்களும், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.