காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாளையங்கோட்டையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன் தலைமை தாங்கி உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து பேசினார். அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அமைச்சர் ராஜலட்சுமி, பிரபாகரன் எம்.பி.. இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவேண்டும் என்பதற்காக தான் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. காவிரி தண்ணீரை பெறுவதற்காக வழக்கு தொடர்ந்து 1991-ம் ஆண்டு 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்று இடைகால தீர்ப்பை பெற்றவர் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட செய்தார்.
காவிரியின் உரிமையை விட்டுக்கொடுத்தவர் கருணாநிதி. காவிரி ஒப்பந்தம் குறித்த வழக்கை இந்திராகாந்தி சொன்னார் என்று திரும்ப பெற்று தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. அவர் 8 துரோகங்களை செய்து உள்ளார்.
அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் மத்திய அரசுக்கு நமது எதிர்ப்பை தெரிவித்து உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறுவதற்காக நடத்தப்படுகிறது. இந்த உண்ணாவிரதம் வெற்றி அடைந்து உள்ளது. இந்த வெற்றி ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
அ.தி.மு.க.வை யாராலும் அழிக்கவோ, ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. தினகரன், சசிகலா ஆகியோரால் கட்சி தலைவராக கூட ஆகமுடியாது. அங்கே இருக்கிறவர்கள் இங்கே வந்தால், நாம் ஏற்றுக்கொள்வோம். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை அவருடைய ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. நமது உண்ணாவிரதத்தின் மூலம் நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கப்படும்.
இந்த உண்ணாவிரதத்தில் நெல்லை மாவட்டம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கார், வேன்களில் வந்து கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற வாசங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி வந்துஇருந்தனர்.
உண்ணாவிரதத்தையொட்டி பாளையங்கோட்டையில் பல இடங்களில் வரவேற்பு பேனர்களும், கட்சி கொடிகளும் கட்டப்பட்டு இருந்தன. கூட்டம் அதிகமாக வந்ததால் பந்தல் விரிவுப்படுத்தப்பட்டது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பந்தல் முழுவதும் ஏராளமான மின்விசிறிகள் வைக்கப்பட்டு இருந்தன.
உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ்பாண்டியன், மனோகரன், நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தர்மலிங்கம், சுப்பையாபாண்டியன், சக்திவேல்முருகன், முத்துச்செல்வி, முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், ஜெயலலிதா பேரவை புறநகர் மாவட்ட செயலாளர் இ.நடராஜன், தலைவர் ஏ.கே.சீனிவாசன், துணைத்தலைவர் கணபதிசுந்தரம், மாவட்ட சிறுபான்மைபிரிவு செயலாளர் கபிரியேல் ஜெபராஜ், இணைச்செயலாளர் டென்சிங்சுவாமிதாஸ், நாங்குநேரி ஒன்றிய அவைதலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக் குட்டிபாண்டியன், மாவட்ட பிரதிநிதி வடிவேல், கண்டிகைபேரி ஜான்சன், உவரி செல்வகுமார், நெல்லை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை, பணகுடி நகரபஞ்சாயத்து முன்னாள் தலைவர் லாரன்ஸ், எம்.ஜி.ஆர். மன்ற பகுதி செயலாளர் ஆறுமுகம், பல்லிக்கோட்டை செல்லத்துரை, பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தச்சைமாதவன், மோகன், ஒன்றிய செயலாளர்கள்அந்தோணி அமல்ராஜ், கருத்தபாண்டி மருதூர் ராமசுப்பிரமணியன் மற்றும் பாண்டியராஜன், ஞானபுனிதா, பெரியபெருமாள், ஆவீன்ரமேஷ், செவல் முத்துசாமி, மகபூப்ஜான், ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.