தாராவி சிவசேனா தலைவர் முத்துராமலிங்கம் உடல் தகனம்
மாரடைப்பால் மரணம் அடைந்த தாராவி சிவசேனா தலைவர் பி.எஸ்.கே.முத்து ராமலிங்கத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மும்பை,
மும்பையில் சிவசேனா கட்சியின் தாராவி தாலுகா தலைவராக இருந்தவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம். இவரது மனைவி மாரியம்மாள் தாராவி 187வது வார்டு சிவசேனா கவுன்சிலராக உள்ளார். நேற்றுமுன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இந்த நேரத்தில் கவுன்சிலர் மாரியம்மாள் மாநகராட்சி சார்பில் கவுன்சிலர் குழுவினருடன் ஒடிசாவில் இருந்தார். முத்துராமலிங்கம் மரணம் அடைந்தது பற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர் விமானத்தில் மும்பை திரும்பினார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கதறி அழுதபடி இருந்தார்.
இந்த நிலையில், சயான் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காலை 11 மணியளவில் தாராவி தேவர் நகரில் அவரது வீடு உள்ள வைபவ் கட்டிட வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு பி.எஸ்.கே.முத்துராமலிங்கத்தின் உடலுக்கு முன்னாள் முதல்மந்திரி மனோகர் ஜோஷி, ராகுல் செவாலே எம்.பி., மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., சதாசர்வன்கர் எம்.எல்.ஏ., கருணாஸ் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் ஸ்ரத்தா ஜாதவ், மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரவிராஜா, ஜெகதீஷ் ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர் ராஜூ சூர்யவன்சி, தாராவி சுந்தர விநாயகர் கோவில் தர்மகர்த்தா சுப்பையா தேவர், தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பொருளாளர் பி.வி.பதி உள்ளிட்ட நிர்வாகிகள், மராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் அங்கப்ப தேவர், தொழில் அதிபர் பி.பி.முத்து,
திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை சேர்மன் ராமராஜா நாடார், மராட்டிய மாநில டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் டி.எம்.ரெம்ஜிஸ், பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்க தலைவர் கே.வி.அசோக்குமார், மராட்டிய மாநில அ.தி.மு.க. செயலாளர் கே.எஸ்.சோமசுந்தரம், மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான், மும்பை காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் கச்ரு ஹரிபாவு யாதவ், மராட்டிய மாநில தமிழ்ச்சங்க தலைவர் அண்ணாமலை, மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ்குமார், இந்திய பேனா நண்பர் பேரவை தலைவர் கருண், மும்பை யாதவ மகாசபை தலைவர் லெட்சுமணன், தருண் பாரத் சேவா சங்க தலைவர் ராஜேந்திரன் சுவாமி, மாறன் நாயகம், பம்பாய் திருவள்ளுவர் மன்ற தலைவர் ஜேம்ஸ், கராத்தே முருகன், ஏ.பி.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஏராளமான சிவசேனா கட்சியினரும் முத்துராமலிங்கத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். முத்துராமலிங்கத்தின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதார்கள். பின்னர் மதியம் 12.30 மணியளவில் சடங்கு, சம்பிரதாயங்கள் முடிந்து முத்துராமலிங்கத்தின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து, தாராவி மெயின் ரோடு, காலகில்லா, 90 அடி சாலை, லேபர்கேம்ப், மாகிம் வழியாக சயான் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சயான் மயானத்தில் முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட், வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. ஆகியோர் முத்துராமலிங்கத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அங்கு முத்துராமலிங்கத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. முத்துராமலிங்கத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாராவியை சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்து இருந்தனர்.