தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-04-02 22:43 GMT
வண்டலூர்,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரி பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த என்ஜினீயரிங், சட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் 20 பேர் திடீரென கல்லூரி நுழைவு வாயில் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்கள் தங்கள் கையில், ‘வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே, தமிழகத்தை வஞ்சிக்காதே’ ‘அமைத்திடு, அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு’, ‘பிச்சை கேட்கவில்லை, உரிமையை கேட்கிறோம்’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்